10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து முதுநிலை பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்ப்பிடத்தக்கது. இதையடுத்து பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கலாமா? வேண்டாமா? என்று பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன.
சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. இதையடுத்து தமிழகத்தில் இன்னும் திறக்கப்படவில்லை. இதையடுத்து பொங்கலுக்கு பிறகு 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாமா? என்பது குறித்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆய்வு செய்து வருகிறார். மேலும் பள்ளிகள் திறப்பு பற்றிய கருத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.