Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இனி தமிழகம் முழுவதும் பொது விடுமுறை – முதல்வர் முக்கிய அறிவிப்பு …!!

தமிழ் கடவுளான முருகப் பெருமான் சிறப்பித்து தமிழ்நாட்டின் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. அந்த திருவிழாவை அரசு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. அதேபோல இந்த விழாக்கள் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் மற்றும் இந்தோனேஷியா நாடுகளில்  வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் சென்றபோது இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகள் தைப்பூச திருவிழாவுக்கு பொது விடுமுறை அளிப்பது போன்று தமிழகத்திலும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கையை பரிசீலித்து வரும் ஜனவரி 28ஆம் தேதி என்று கொண்டாடப்படும் தைப்பூச திருவிழா பொது விடுமுறை நாளாக அறிவிக்க படும். இனிவரும் ஆண்டுகளில் தைப்பூசத் திருவிழா நாளானது பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். தமிழகத்தில் பொது விடுமுறை பட்டியலில் தைப்பூச திருநாளும் சேர்க்கப்பட்டிருக்கிறது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Categories

Tech |