தமிழ் கடவுளான முருகப் பெருமானை சிறப்பித்து தமிழ்நாட்டின் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. அந்த திருவிழாவை அரசு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. அதேபோல இந்த விழாக்கள் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் மற்றும் இந்தோனேஷியா நாடுகளில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
பல்வேறு மாவட்டங்களில் முதல்வர் சுற்றுப்பயணம் சென்றபோது இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகள் தைப்பூச திருவிழாவுக்கு பொது விடுமுறை அளிப்பது போன்று தமிழகத்திலும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களின் கோரிக்கையை பரிசீலித்து வரும் ஜனவரி 28ஆம் தேதி என்று கொண்டாடப்படும் தைப்பூச திருவிழா பொது விடுமுறை நாளாக அறிவிக்க படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
இனிவரும் ஆண்டுகளில் தைப்பூசத் திருவிழா நாளானது பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தற்போது இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். தமிழகத்தில் பொது விடுமுறை பட்டியலில் தைப்பூச திருநாளும் சேர்க்கப்பட்டிருக்கிறது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தைப்பூசம் நாட்களில் முருகப்பெருமானின் இருக்கக்கூடிய அறுபடை வீடுகளிலும் சிறப்பு தரிசனங்கள் மேற்கொள்ளப்படும். தமிழக மக்கள் எல்லா பகுதிகளிலும் இருக்கக்கூடிய முருகன் கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். இந்த நிலையில் மக்கள் கோரிக்கையை ஏற்று முதல்வர்அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.