ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம் .
ஆரஞ்சு பழம், புளிப்பும் இனிப்பும் சுவையுடையது. இதில் விட்டமின் சி சத்து நிறைந்திருக்கிறது. இது உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. மேலும் புத்துணர்ச்சியை கொடுக்க கூடியது. உடல் பலவீனமான சமயங்களில் ஆரஞ்சு பழத்தை ஜூஸ் செய்து கொடுத்தால் புத்துணர்ச்சியை கொடுக்கும். இதை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.
விட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு மன அழுத்த ஹார்மோன்களை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவும்.
நாள்பட்ட மன அழுத்தம் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இந்த மன ஆரோக்கியத்திற்கு ஆரஞ்சு ஒரு தீர்வாக இருக்கும்.
எடை அதிகரிப்பு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், மாதவிடாய் பிரச்சினைகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே மன ஆரோக்கியமும் முக்கியம்.
இரத்த அழுத்தம் குறையும், சருமம் பொலிவு பெரும்.
சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கலாம்.