கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியலை உடைத்து கொள்ளை அடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
அச்சுகிராமம் பகுதியில் மயிலாடியில் கிறிஸ்துவ ஆலயம் ஒன்று உள்ளது. அங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை ஆலயத்தைப் பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் ஊழியர்கள் வழக்கம்போல் நேற்று காலை ஆலயத்தை திறப்பதற்காக வந்தபோது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின் அவர்கள் ஆலயத்திற்குள் சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் உள்ள பணம் திருடப்பட்டு இருந்ததை கண்டார். மேலும் செபரூதின் கையிலிருந்த தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி தராசு திருடப்பட்டு இருந்ததையும் கண்டார்.
உடனே அவர்கள் ஆலய நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதனைஅடுத்து அந்த பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வில் மர்மநபர் ஒருவர் நேற்று அதிகாலை சுமார் இரண்டு மணிக்கு ஆலயத்தை சுற்றி வந்த காட்சி பதிவாகி இருந்தது. எனவே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.