Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இதயத்திற்கு நல்லது” கங்குலி நடித்த…. எண்ணெய் விளம்பரங்கள் நிறுத்தம்…!!

கங்குலி நடித்த எண்ணெய் விளம்பரங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருடைய இதயத்தில் 2 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இதனைத்தொடர்ந்து அவருடைய இதயத்தில் இருந்தஅடைப்புகளும் அறுவை சிகிச்சை மூலமாக சரி செய்யப்பட்டு தற்போது கங்குலி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அவர் நடித்து ஒளிபரப்பப்பட்டு வந்த எண்ணெய் விளம்பரங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. “இதயத்திற்கு நல்லது” என விளம்பரம் செய்தவரே இதய நோயால்  பாதிப்படைந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து விளம்பரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |