மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வினை வருடத்திற்கு 2 முறை நடத்த தேசிய தேர்வு முகாமை பரிந்துரை செய்துள்ளது.
மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதை வருடந்தோறும் மருத்துவ படிப்பிற்கு சேர விருப்பமுள்ள மாணவர்கள் எழுதி வருகின்றனர். மேலும் இந்த தேர்வினில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும். மூலம் சில வீணாகி போகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இந்த தேர்வு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடப்பாண்டு முதல் வருடத்திற்கு இரண்டு முறை நீட் தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் மாணவர்களின் சிரமம் குறைய வாய்ப்புள்ளது. மேலும் முதல் முறை நீட் தேர்வு எழுத முடியாமல் போன திறமையுள்ள மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர ஒரு வருடம் முழுவதும் காத்திருக்க வேண்டியதில்லை என்று கூறியுள்ளது.