அரியானா எல்லையில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
டெல்லி-அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் 41 நாளை கடந்துள்ளது எனினும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்டங்களை விவசாயிகள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. மத்திய அரசுக்கும் விவசாய சங்கங்களுக்கும் இடையே 7 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் இந்த ஏழு முறையும் பேச்சுவார்த்தை தோல்வியில் தான் முடிந்துள்ளது.
எனவே விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் டெல்லி மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகின்றது. இந்நிலையில் அரியானா பகுதியில் இன்று காலை முதலே அதிக அளவில் மழை பொழிந்து வருகின்றது. இதனால் மழை நீர் விவசாயிகளின் கூடாரத்திற்குள் புகுந்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையாலும் கடும் பனிப்பொழிவாலும் விவசாயிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.