Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு வரலாம் – தமிழக அரசு எச்சரிக்கை …!!

சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 44 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை நாலுபேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு இருக்கின்றது. கேரளா, ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் நேரடியாக கால்நடையை பாதித்தாலும் கூட அது மனிதர்களுக்கு வரலாம் எனவே கால்நடைத்துறை தயார்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம். கால்நடை துறையைப் பொருத்தவரை, கேரள எல்லையோர தமிழக ஆறு மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி, தென்காசி,  திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி இந்த எல்லைப் பகுதிகளில் இருக்கின்ற 26 செக்போஸ்ட்களில் தீவிர கண்காணிப்பு செய்து கொண்டிருக்கிறோம். அதுமட்டுமல்லாமல் கிருமிநாசினி தெளிப்பதற்கு சுகாதாரத் துறையுடன் இணைந்து பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. பறவை காய்ச்சல் கேரளாவிலிருந்து வராமலிருக்க தடுப்பு பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

Categories

Tech |