வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைன் வழியாக வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. எனவே அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை பரபரப்பாக தொடங்கியுள்ளனர். மேலும் ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக இந்த ஆண்டு முதல் ஒரு புதிய நடைமுறையை கொண்டு வரப்பட உள்ளது.
அதாவது இந்த ஆண்டு முதல் இந்தியாவில் நடக்க உள்ள தேர்தல் அனைத்திலும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களையும் ஆன்லைன் வாயிலாக வாக்களிக்க நடவடிக்கை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த பரிந்துரைகள் வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மதம் தெரிவித்ததால் முடிவு செய்ய பல அமைப்புகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்து வருகிறது.