உருமாறிய கொரோனா இந்தியாவிலும் தமிழகத்திலும் அதிகமாக பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் மக்கள் கொரோனாவில் இருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் புதிதாக உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இந்த உருமாறிய கொரோனா முந்தைய வைரசை விட வீரியம் மிக்கதாக இருப்பதாகவும், வேகமாக பரவி வருவதாகவும் தகவல் கூறப்படுகின்றது. மேலும் இந்த உருமாறிய கொரோனா ப்ரிட்டனிலிருந்து வந்தவர்களால் இந்தியாவிலும் தற்போது பரவத் தொடங்கியிருக்கிறது. இதையடுத்து இந்தியாவில் உருமாறிய கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 லிருந்து 58 ஆக அதிகரித்துள்ளது.
பிரிட்டனிலிருந்து நாடு திரும்பிய மேலும் 20 பேருக்கு புதிய கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கண்காணிப்பும், முன்னெச்சரிக்கை பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு புதிய வகையான கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.