Categories
மாநில செய்திகள்

மக்களே! 6 மணி நேரத்திற்கு…. சென்னையில் கனமழை நீடிக்கும் – வானிலை ஆய்வுமையம்…!!

சென்னையில் 3 முதல் 6 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் அடுத்த மூன்று முதல் ஆறு மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் மழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் நேற்று இரவு முதல் தற்போது வரை சென்னையில் 12 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் கனமழை காரணமாக ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வழிந்தன. இந்நிலையில் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் நிரம்பியதால் இன்று ஏரிகள் திறந்து விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |