தமிழக ஊரக வளர்ச்சி துறையின் கீழ் மாவட்டந்தோறும் செயல்படும் ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறை அலுவலகங்களில் காலியாக உள்ள பணிகளை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இராமநாதபுர மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் Overseer/Junior Drafting Officer பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Overseer/Junior Drafting Officer
தகுதி: டிப்ளமோ சிவில் இன்சினியரிங்
வயது: அதிகபட்சம் 35 வரை இருக்கவேண்டும்
கடைசி தேதி: 06.01.2021
சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் 06.01.2021 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் நேரடி உதவியாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ராமநாதபுரம் -623503 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு https://ramanathapuram.nic.in/ இந்த இணையதளத்தைப் பார்வையிடவும்.