இமாச்சல பிரதேச மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் சம்பா பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இதற்கு முன்னர் டெல்லியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.