Categories
தேசிய செய்திகள்

கொச்சி – மங்களூரு இடையே குழாய் கியாஸ் விநியோக திட்டம் – மோடி தொடங்கி வைத்தார் …!!

நாட்டிலேயே முதல்முறையாக குழாய் மூலம் வீடுகளுக்‍கு எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை காணொலி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோதி தொடங்கி வைத்தார். அண்மைக்‍ காலமாக நாடு வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

கொச்சி – மங்களூரு இடையிலான 450 கிலோ மீட்டர் தொலைவு குழாய் வழி எரிவாயு வினியோக அமைப்பு திட்டம் 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ளது. கெயில் இந்தியா நிறுவனம் இந்த கியாஸ் குழாய் இணைப்பை உருவாக்கியிருக்கிறது. இதன்மூலம், கொச்சியில் உள்ள, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை மீண்டும் வாயுவாக்கும் முனையத்தில் இருந்து மங்களூருவுக்கு கியாஸ் அனுப்பப்படும்.

எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களை இந்த குழாய் அமைப்பு கடந்து செல்கிறது. இத்திட்டத்தின் மூலம் கர்நாடக, கேரள மக்‍கள் பயனடைவார்கள்.

ஒரே நாடு, ஒரே எரிவாயு விநியோக அமைப்பு நோக்கத்தில், 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த புதிய திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோதி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்த எரிவாயு குழாய்த்திட்டத்தை தேசத்திற்கு அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், இன்றைய தினம், இந்தியாவுக்கு, குறிப்பாக கர்நாடகா மற்றும் கேரள மக்களுக்கு ஒரு முக்கியமான நாள் என கூறினார்.

Categories

Tech |