நடிகர் சிம்புவின் நடிப்பில் தயாராகியுள்ள ‘ஈஸ்வரன்’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ஈஸ்வரன்’. சுசீந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் நிதி அகர்வால் ,நந்திதா ,பாரதிராஜா ,பாலா சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் தியேட்டர்களில் வெளியாக இருப்பதால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் .
இந்நிலையில் ஈஸ்வரன் படத்தின் டிரைலர் வருகிற ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . கிராமத்துப் பின்னணியில் சென்டிமென்ட், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் கலந்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது .