Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடப்பாவிகளா…! இதுலயும் கலப்படமா ? தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவு …!!

சர்க்கரை பாகு மற்றும் சில ரசாயனங்களைச் சேர்த்து பனைவெல்லம், பனங்கற்கண்டு போன்று தயாரித்து விற்பனை செய்வதைத் தடுக்‍கக்‍கோரி வழக்கில், தமிழக அரசு அறிக்‍கை தாக்‍கல் செய்ய உயர்நீதிமன்றக்‍ கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் சர்க்கரை, சர்க்கரை பாகு ஆகியவற்றை கலப்படம் செய்து பனைவெல்லம், பனங்கற்கண்டு தயாரிக்க இடைக்கால தடை விதிக்‍கக்கோரி தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் மனுத்தாக்‍கல் செய்தார்.

இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் கொண்ட அமர்வு, மனுதாரர் சமர்ப்பித்த ஆவணங்களின் அடிப்படையில் பனைவெல்லம், பனங்கற்கண்டு தயாரிப்பில் கலப்படம் செய்யப்படுவது உறுதியாவதாகக்‍ குறிப்பிட்டனர்.

பனைவெல்ல கலப்படம் தொடர்பாக தமிழக உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் எடுத்த நடவடிக்‍கை குறித்து அறிக்‍கை தாக்‍கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வரும் 28-ம் தேதிக்கு வழக்‍கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Categories

Tech |