Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING: 13ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு உத்தரவு …!!

வருகின்ற 13ஆம் தேதி முதல் நாடு முழுதும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு கூறியிருக்கிறது.

கொரோனா தடுப்பூசியை நாடு முழுவதும் முதற்கட்டமாக விரைவிலேயே தொடங்க வேண்டும்.  இந்த வருடத்திலேயே அதிகபட்சமாக எத்தனை பேருக்கு தடுப்பூசியை கொண்டு சேர்க்க முடியுமோ ? அத்தனை பேரும் தடுப்பூசியை  கொண்டு சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காகத்தான் சோதனை ஓட்டங்கள் எல்லாம் நடத்தப்பட்டுள்ளன. அத்தகைய சூழ்நிலையில் இன்னும் 10 நாட்களுக்குள் இந்தியாவிலே முதல் கொரோனா தடுப்பூசி  அளிக்கும் பணி தொடங்கும் என தற்பொழுது சுகாதாரத்துறை அதிகாரிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார்கள்.

அதில் குறிப்பாக ஜனவரி 13ஆம் தேதியன்று இந்த பணியை தொடங்க வேண்டுமென குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், மத்திய அரசு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு எப்படி கொரோனா தடுப்பூசியை அனுப்புவது ? அங்கே யார் யாரெல்லாம், எந்தெந்த நாட்களிலேயே தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள்,  என்பதற்காக  பட்டியல் ஏற்கனவே தயார் செய்யப்பட்டு இருக்கின்றன. முதற்கட்டமாக முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |