கொரோனா தடுப்பூசியை நாடு முழுவதும் முதற்கட்டமாக விரைவிலேயே தொடங்க வேண்டும். இந்த வருடத்திலேயே அதிகபட்சமாக எத்தனை பேருக்கு தடுப்பூசியை கொண்டு சேர்க்க முடியுமோ ? அத்தனை பேரும் தடுப்பூசியை கொண்டு சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காகத்தான் சோதனை ஓட்டங்கள் எல்லாம் நடத்தப்பட்டுள்ளன. அத்தகைய சூழ்நிலையில் இன்னும் 10 நாட்களுக்குள் இந்தியாவிலே முதல் கொரோனா தடுப்பூசி அளிக்கும் பணி தொடங்கும் என தற்பொழுது சுகாதாரத்துறை அதிகாரிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார்கள்.
அதில் குறிப்பாக ஜனவரி 13ஆம் தேதியன்று இந்த பணியை தொடங்க வேண்டுமென குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், மத்திய அரசு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு எப்படி கொரோனா தடுப்பூசியை அனுப்புவது ? அங்கே யார் யாரெல்லாம், எந்தெந்த நாட்களிலேயே தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள், என்பதற்காக பட்டியல் ஏற்கனவே தயார் செய்யப்பட்டு இருக்கின்றன. முதற்கட்டமாக முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத் துறை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு போலீசார், இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் போன்றவர்களுக்கும் அளிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் COVIN செயலி மூலமாக பதிவு செய்யப்பட்வர்களுக்கு ஜனவரி 13-ஆம் தேதி முதல் தடுப்பூசியை அளிப்பதற்கான பணியை தொடங்க வேண்டும் என்று மத்திய அரசு அனைத்து திட்டங்களையும் தயாரார் செய்து கொண்டு இருக்கின்றது.
இதனையே தற்போது மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்திருக்கிறார்கள். ஆகவே விரைவிலேயே இது தொடர்பாக ஒவ்வொரு மாநிலத்துக்கும் என்னென்ன நாட்களிலேயே… எத்தனை, எத்தனை நபர்களுக்கு…. எந்தெந்த மாவட்டங்களில் தடுப்பூசி அளிக்க வேண்டும் ? அதற்கான ஏற்பாடுகள் எப்படி செய்யவேண்டும் ? என்ற விஷயங்கள் எல்லாம் தெரிவிக்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.