Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செம்பரம்பாக்‍கம், புழல் ஏரிகள் மீண்டும் திறப்பு – உபரி நீர் வெளியேற நடவடிக்‍கை …!!

செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இன்று பிற்பகலில் உபரி நீர் திறக்கப்பட்டது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இரு ஏரிகளில் இருந்தும் விநாடிக்கு 500 கன அடி வீதம் உபரி நீர் திறக்‍கப்பட்டது. இதனால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தொடர் மழையால் பூண்டி நீர்த்தேக்‍கத்தில் இருந்து திறக்‍கப்படும் உபரி நீரின் அளவு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்‍கப்பட்டுள்ளது. ஏற்கனவே பெய்த மழையால் நீர்த்தேக்‍கம் நிரம்பியுள்ள நிலையில், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்தும் தண்ணீர் வந்து கொண்டிருக்‍கிறது. இதனால் பூண்டிக்‍கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், உபரி நீர் திறப்பின் அளவும் அதிகரிக்‍கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |