கேரளாவில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருவததைத் தொடர்ந்து, அந்நோயை மாநிலப் பேரிடராக அறிவித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரளாவின் கோட்டயம், ஆழப்புழா உள்ளிட்ட மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து, இப்பகுதிகளில் உள்ள வாத்துகள், கோழிகள் மற்றும் இதர பறவைகளை ஒட்டுமொத்தமாக அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பறவைக் காய்ச்சல் மாநிலப் பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, பறவைகளை அழிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், மனிதர்களுக்கு பறவைக்காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.