இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள சிந்தாமணி ரோடு பகுதியில் வந்த வாகனங்களை காவல் துறையினர் நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர். அச்சமயத்தில் இரண்டு இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் அவ்வழியாக வந்து கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.
போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் கீரைத்துறை பசும்பொன் நகரை சார்ந்த ராமகிருஷ்ணன், குமாரவேல், அனுப்பாண்டி, காளீஸ்வரன் என்பதும் அவர்கள் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி சென்றதும் தெரியவந்துள்ளது. இதை அடுத்து போலீசார் அந்த நான்கு நபர்களையும் கைது செய்து 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.