Categories
சினிமா தமிழ் சினிமா

தியேட்டர்களில் 100 சதவீத அனுமதி… இது தற்கொலை முயற்சி… டாக்டர் வெளியிட்ட உருக்கமான பதிவு…!!!

‘தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது தற்கொலை முயற்சி’ என டாக்டர் ஒருவர் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

தியேட்டர்கள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க நேற்று தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை பிறப்பித்தது . திரையுலகைச் சேர்ந்த பலர் இதை வரவேற்றாலும் அரவிந்த்சாமி, கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சமூகவலைத்தள பக்கத்தில் டாக்டர் அரவிந்த் ஸ்ரீநிவாஸ் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் ‘டியர் விஜய் சார் மற்றும் சிலம்பரசன் சார் மற்றும் மரியாதைக்குரிய தமிழக அரசு . நான் மற்றும் என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான டாக்டர்கள் சோர்வாக இருக்கிறார்கள் . போலீஸ் அதிகாரிகள் ,சுகாதாரத்துறை ஊழியர்கள் ,தூய்மைப் பணியாளர்கள் சோர்வாக உள்ளனர் . கொரோனா பரவலைத் தடுக்க நாங்கள் அனைவரும் கடுமையாக வேலை செய்துகொண்டிருக்கிறோம் . எங்கள் வேலையை யாரும் பெருமைப்படுத்தி சொல்லவில்லை ‌. அது பார்ப்பவர்களுக்கு பெரிய விஷயமாகவும் தெரியவில்லை . எங்களுக்கு முன் கேமராக்களும் இல்லை, நாங்கள் ஸ்டன்ட் காட்சிகளில் நடிப்பதும் இல்லை. நாங்கள் சினிமாக்களில் வரும் ஹீரோக்கள் இல்லை ‌. எங்களுக்கு மூச்சுவிட நேரம் வேண்டும் .

In 'Master' vs 'Easwaran', Simbu makes a different request to his fans! |  The New Stuff

சிலரின் பேராசை மற்றும் சுயநலத்திற்கு நாங்கள் பலிகடா ஆக விரும்பவில்லை . இன்னும் இந்த நோயால் மக்கள் இறக்கின்றனர் . தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது என்பது தற்கொலை முயற்சி . இல்லை இது கொலை , சட்டம் செய்பவர்களோ ஹீரோக்களோ கூட்டத்துடன் சேர்ந்து படம் பார்க்க போவதில்லை . மெதுவாக அணையும் தீயை மீண்டும் தூண்டிவிட வேண்டாமே . அது இன்னும் முழுதாக அணையவில்லை . ஏன் நாம்  இன்னும் ஆபத்தில் இருக்கிறோம் என்பதை அறிவியல் ரீதியாக விளக்க நினைத்தேன் . ஆனால் என்ன பயன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்’ என பதிவிட்டுள்ளார் .டாக்டர் ஒருவரின் இந்த உருக்கமான பதிவு சமூக வலைத்தள பக்கத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது ‌.

Categories

Tech |