Categories
உலக செய்திகள்

குளவி கொட்டியதால்… ஏற்பட்ட கொடூர விபத்து… பெண்ணுக்கு நேர்ந்த துயரம்…!!

பெண் ஒருவர் மூன்று கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரிட்டனில் உள்ள Kirkle levington என்ற இடத்தில் மூன்று கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியதால்  பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் Rosina Ingram என்ற பெண் உயிரிழந்துள்ளார். மேலும்  ஒருவர் மரணத்திற்கு காரணமாக இருக்கும் வகையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக Helen shaw என்ற பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடரப்பட்டு வருகிறது.

மேலும் இந்த வழக்கின் விசாரணையின்போது வேலன் தரப்பில் ஆஜரான வக்கீல் கூறியுள்ளதாவது Helen shaw வாகனம் ஓட்டிக் கொண்டு இருக்கையில் அவரை ஒரு குழவிக் கொட்டியுள்ளது. இதனால் மொத்த கட்டுப்பாட்டையும் இழந்ததால் தான் விபத்து ஏற்பட காரணமாகியுள்ளார் என்று வாதாடியுள்ளார். மேலும் இந்த வாதங்களை கேட்ட நீதிபதி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார். மேலும் வழக்கின் விசாரணையை நவம்பர் மாதம் 15ம் தேதிக்கு ஒத்தி வைத்து தீர்ப்பளித்துள்ளார்.

Categories

Tech |