Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே கவனம்! மண்ணெணெய்யை ஜூஸ் என்று…. குடித்த குழந்தை பலி…!!

குழந்தை ஒன்று மண்ணெண்ணெய்யை ஜூஸ் என்று நினைத்து குடித்து உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகாவில் உள்ள காமாட்சி பட்டியில் வசித்து வரும் தம்பதிகள் சதீஷ் – சுகன்யா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஜீவா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சதீஷ் எப்பொழுதும் போல வேலைக்கு சென்று விட்டு திரும்பிய நிலையில், விளையாடிக்கொண்டிருந்த குழந்தை வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஜூஸ் எபாட்டில் ன்று நினைத்து எடுத்து குடித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுகன்யா குழந்தையை புத்தூரில் உள்ள அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

ஆனால் அங்கு போதிய வசதி இல்லாததால் குழந்தையை திருச்சி அரசு மனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. பெற்றோர்களின் கவனக்குறைவால் ஒரு குழந்தையின் உயிர் பறி போன இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |