Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆற்றுப் பகுதியில் போட்டோ ஷூட் … தடுக்கி விழுந்த நடிகை… வைரலாகும் வீடியோ…!!

ஆற்றுப்பகுதியில் போட்டோ ஷூட் நடத்திய போது நடிகை தடுக்கி விழுந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .

மலையாள திரையுலகில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான ‘பாய் ஃபிரெண்ட்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஹனி ரோஸ் . இவர் மலையாள பிரபல ஹீரோக்கள் மோகன்லால் ,மம்முட்டி ,சுரேஷ்கோபி ,ஜெயராம், திலீப் உட்பட பல கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் . இவர் தமிழில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான கனவே படத்தில் நடித்துள்ளார் . இதையடுத்து சிங்கம் புலி, மல்லுக்கட்டு ,கந்தர்வன் போன்ற படங்களில் நடித்தார் . மேலும் தெலுங்கு மொழிப் படத்திலும் நடித்துள்ளார் .

சேலை தடுக்கியது

திரையுலக நடிகைகள் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம் . இந்நிலையில் சமீபத்தில் கேரளாவில் ஆற்றுப் பகுதியில் போட்டோஷூட் நடத்தியுள்ளார் நடிகை ஹனி ரோஸ் . அப்போது திடீரென சேலை தடுக்கி கீழே விழ அவரை போட்டோ ஷூட் குழுவினர் ஓடி சென்று தூக்கியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது .

Categories

Tech |