வரும் ஜனவரி 13-ஆம் தேதியிலிருந்து கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு துவக்கத்திலேயே கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் 13ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது பொங்கலுக்கு முன்பாகவே போனஸ் செய்தியாக அமைந்துள்ளது. தடுப்பூசி போடும் பணி முடிந்த அளவில் நாடு முழுவதும் எத்தனை பேருக்கு செலுத்த முடியுமோ அனைவருக்கும் செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசிகளை எப்படி கொண்டு செல்வது, யார் யாரெல்லாம் எந்தெந்த நாட்களில் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற பட்டியலை மத்திய அரசு தயாரித்து இருக்கிறது. இது குறித்து மாநில வாரியான விவரப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது.