நல்ல மழை பெய்வதால் 2021 வருடம் அரிதான வருடம் என்று சொல்லலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்றும் நாளையும் நல்ல மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மற்றும் நாளை பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, கடலூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பதிவில், “இந்தோ பசிபிக் பகுதியிலிருந்து காற்று வீசுவதால் பருவக்காற்று ஜனவரியிலும் தொடர்ந்து வீசுகிறது. எனவே 2021 என்பது மிகவும் அரிதான வருடம் என்று சொல்லலாம் என்று தெரிவித்துள்ளார்.