Categories
அரசியல்

“அருமையான திட்டம்” தினமும் ரூ.160 சேமித்து…. இறுதியில் லாபமாக 23 லட்சம் பெறலாம்….!!

குறைவான தொகையை முதலீடு செய்து அதிக லாபத்தை பெறுவது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

எல்ஐசி நிறுவனமானது பல வருடங்களாக மக்களுக்கு காப்பீடு திட்டம் மற்றும் முதலீடு சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் வெகுஜன மக்களின் நம்பிக்கையையும், நல்ல வரவேற்பையும் பெற்று இருப்பதே ஆகும். குறைந்த தொகையை முதலீடு செய்து அதிக லாபம் பெறுவதற்கான நல்ல ஒரு திட்டத்தை இங்கே பார்க்கலாம். எல்ஐசியில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறும் மணி பேக் பிளான் (money pack plan) என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் ஒவ்வொரு வருடமும் பணம் திரும்ப அதிக லாபத்தில் கிடைக்கும். மேலும் மெச்சூரிட்டி முடிவில் நல்ல வருமானம் நமக்கு கிடைக்கும். இதனுடன் சில சலுகைகளும் இருக்கின்றன. இது ஒரு ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகும். இதில் நமக்கு நல்ல ஒரு வருமானமும் போனஸும் கண்டிப்பாக கிடைக்கும். இந்த திட்டத்தில் 20 வருடங்கள், 25 வருடங்கள் என்று இரண்டு ஆப்ஷன்கள் இருக்கின்றன. மேலும் வட்டி தொகை, பிரீமிய தொகை, மெச்சூரிட்டி தொகைக்கு வரி விதிக்கப்படாது.

இந்தத் திட்டத்தில் 25 வருட பாலிசியில் இணைவதாக வைத்துக்கொள்வோம். எனவே தினமும் 160 ரூபாய் சேமித்து முதலீடு செய்தால் 25 வருடங்கள் கழித்து உங்களுக்கு லாபமாக 23 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதற்கு வரி கிடையாது என்பது இதில் சிறப்பு அம்சமாகும். 25 வருடங்கள் முதலீட்டில் ஒவ்வொரு ஐந்து வருடத்தில் முடிவிலும் 15 முதல் 20 விழுக்காடு பணம் திருப்பிக் கொடுக்கப்படும் .எனினும் குறைந்தபட்சம் 10 சதவீதம் பிரீமியம் டெபாசிட் செய்த பிறகு இவ்வகையில் பணம் திரும்பக் கிடைக்கும்.

Categories

Tech |