Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பெற்றோர் என்னை காரணமின்றி திட்டுகின்றனர்”… கடிதம் எழுதி வைத்துவிட்டு 13 வயது சிறுமி செய்த செயல்…!!

எட்டாம் வகுப்பு மாணவி கடிதம் எழுதி வைத்து வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சண்முகராஜா. இவருக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.சண்முகராஜாவின் மகள் எப்போதும் மொபைல் போனில் நேரத்தை செலவழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் சிறுமியை கண்டித்துள்ளனர் . இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சிறுமி வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரித்து வீட்டில் சிறுமி  எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர் . அக்கடிதத்தில், “என்னை காரணமின்றி பெற்றோர் திட்டுகின்றனர். உயிரோடு வாழ்வதை விட இறந்து விடலாம் என்று எனக்கு தோன்றுகிறது. நான் வீட்டை விட்டு வெளியேறுகிறேன். என்னை யாரும்  தேட வேண்டாம். எனக்கு வாங்கி  கொடுத்த புது துணிகளை ஆதரவற்ற இல்லங்களுக்கு கொடுத்துவிடுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது தெரிய வந்தது.காவல்துறையினரின் தீவிர விசாரணையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிறுமி ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த காவல்துறையினர் சிறுமி எங்கு சென்றார் என்று தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |