ராகுல் காந்தி பதவி விலக கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அனுமதியின்றி பேரணி நடத்தியதால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .
மக்களவை தேர்தல் முடிவு பெற்ற நிலையில் பல மாநிலங்களில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் என்று தகவல்கள் வெளியாகின .
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து பதவி விலக வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று சென்னையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதவியில் இருந்து விலக கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பேரணி நடத்தியது. இதற்கு கே எஸ் அழகிரி தலைமை தாங்கினார் .திருநாவுக்கரசு உள்ளிட்ட தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த பேரணிக்கு காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.இதன் படி கே எஸ் அழகிரி திருநாவுக்கரசு உள்ளிட்டோர் மீது சட்ட விரோதமாக நடந்து கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.