நடிகர் ஆர்யா அவரது நண்பர்களுடன் கொட்டும் மழையில் உடற்பயிற்சி செய்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் ரொமான்டிக் ஹீரோவாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் தற்போது ‘சார்பட்டா பரம்பரை’ படம் தயாராகியுள்ளது . வட சென்னையில் இருக்கும் பாக்ஸர்களை மையப்படுத்தி உருவாகிய இந்தப் படத்தில் நடிப்பதற்காக நடிகர் ஆர்யா தனது உடலமைப்பை முழுமையாக மாற்றியிருந்தார் . சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பிரத்தியேக புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது . இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது .
“Life is not about waiting for the storm to pass. It’s about learning to run in the rain “🏃♂️☔️
Athelete @KalaiActor with his stunts 😍😍👍#BeachRun #RainRun pic.twitter.com/rg9ikuJsRO— Arya (@arya_offl) January 5, 2021
இதையடுத்து நடிகர் ஆர்யா அரண்மனை 3 ,எனிமி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் . இந்நிலையில் கொட்டும் மழையில் மெரினா கடற்கரையில் தன் நண்பர்களுடன் ரன்னிங் சென்றுள்ளார் ஆர்யா . அவருடன் நடிகர் கலையரசனும் சென்றுள்ளார் . தற்போது ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . மழையை பொருட்படுத்தாமல் உடற்பயிற்சியில் ஈடுபட்ட ஆர்யா மற்றும் கலையரசனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர் .