Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல் டான்ஸ்…. பின்னி எடுத்த தளபதி…. இணையத்தை தெறிக்க விடும் மாஸ்டர் புரோமோ…!!

மாஸ்டர் படத்தின் முதல் புரோமோவானது இணையத்தில் 100 மில்லியன்களை கடந்து தெறிக்க விட்டுள்ளது.

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து வரும் ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். படத்தின் வெளியீட்டிற்கு தமிழக அரசும் ஒப்புதல் அளிக்கும் விதமாக 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் மேலும் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக மாஸ்டர் படக்குழுபடத்தின் போஸ்டர்களையும், அப்டேட்களையும் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றிருக்கும் “வாத்தி கம்மிங்க்” என்னும் பாடல் நூறு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனால் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கே சென்று உள்ளனர். மேலும் அவர்களு க்கு உற்சாகம் அளிக்கும் விதமாக மாஸ்டர் படத்தின் முதல் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் அதி வேகமாக பரவி வருகின்றது.

Categories

Tech |