சமூக வலைதளங்களில் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் பிரபலமாக பேசப்பட்டுவருபவர் நித்யானந்தா. அவர் நீதிமன்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை தலைமறைவாக இருந்து வருகிறார்.
கைலாச என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாக அவர் அவ்வப்போது சமூக வலைத் தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அது எங்கு உள்ளது என்று இதுவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சர்வதேச காவல்துறையினரும் நித்யானந்தாவை தேடிவருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு வந்து விட்டால் அங்கிருந்து கருடா என்ற விமானம் மூலம் இந்தியர்களை கைலாசத்துக்கு அழைத்து வருவார்கள் என்று கூறினார். வீடியோவில் உள்ள தொழில்நுட்ப ஐடியை பொருத்தவரை இது வணுவாட்டி என்ற தீவு என்பது தெரியவந்துள்ளது.
நித்யானந்தா ஆஸ்திரேலியாவில் இருந்து 750 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வணுவாட்டி என்ற எரிமலைத் தீவில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தீவில் வங்கிகளில் பணம் போடலாம் என்பதால் அதை பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாயை அங்கு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதனை கைலாசம் என்று பித்தலாட்டம் செய்து வருகிறார் எனவும், இதற்குப் பிறகாவது அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்குமா என்றும் கேள்வி எழும்பியுள்ளது.