Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரொம்ப பழைய கட்டிடம்…! பலமுறை சொல்லிட்டோம்…. உயிர் தப்பிய பஞ். தலைவர்… விருதுநகரில் பரபரப்பு ..!!

பஞ்சாயத்து அலுவலகத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுக்கிரவார்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. இந்த பஞ்சாயத்து அலுவலகமானது ஒரே ஒரு அறையில் மட்டுமே இயங்கி வருகிறது. மேலும் இந்த பஞ்சாயத்து கட்டிடம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் போதிய பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது. இந்நிலையில் புதிய பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத் தலைவராக பதவி ஏற்றவர்கள் பஞ்சாயத்து கூட்டத்தின்போது புதிய அலுவலகம் கட்டுவதற்கான தீர்மானம் நிறைவேற்றி கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட நிர்வாகிகளுக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் புதிய பஞ்சாயத்து அலுவலகம் கட்டுவதற்கு போதிய நிதி ஒதுக்கீடு ஆணையை மாவட்ட நிர்வாகம் பிறப்பிக்கவில்லை. இந்நிலையில் பஞ்சாயத்து அலுவலகத்தில் துணைத்தலைவர் அதிவீரன்பட்டி செல்வம், தலைவர் பாண்டியம்மாள் மற்றும் பிற பஞ்சாயத்து ஊழியர்கள் இருந்தபோது திடீரென பஞ்சாயத்து அலுவலகத்தில் மேல் கூரையின் மீது உள்ள பூச்சு பெயர்ந்து விழுந்துவிட்டது. இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. எனவே பழுதடைந்த பஞ்சாயத்து அலுவலகத்தை பார்வையிட்டு புதிய அலுவலகம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |