Categories
சினிமா தமிழ் சினிமா

ஆன்மீகத்தில் ஐக்கியமான அமலா பால்.‌‌.. வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை அமலாபால் ‘ஆன்மீகத்தின் சிறந்த தொடக்கம்’ என பதிவிட்டு இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை அமலாபால் தற்போது அதோ அந்த பறவை போல, கடாவர் ஆகிய படங்களில் நடித்துள்ளார் . இதையடுத்து இவர் கன்னடத்தில் ஒரு வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் . மேலும் இவர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் ஆந்தாலஜி சீரிஸிலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் . இந்நிலையில் நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகா செய்வது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் . அதில் ‘நான் முதன் முறையாக ஈஷா யோகா மையத்திற்கு என் 19 வயதில் வந்தேன். அப்போது எனக்கு மூன்று கேள்விகள் கேட்பதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது .

ஆனால் எல்லா கேள்விகளுக்கும் சத்குரு யோகா செய்வதாக பதிலளித்தார் . அப்போது அந்த வார்த்தைகளின் வலிமை எனக்கு தெரியவில்லை . ஒருவேளை அவரது கருத்துக்களை ஏற்றுக் கொண்டிருந்தால் என் வாழ்வில் எவ்வளவு மாற்றம் பெற்று இருப்பேன். சரியாக 10 ஆண்டுகளுக்குப் பின் அவரை சந்தித்தேன் . ஒரு முழு வட்டத்திற்கு என் வாழ்க்கை வந்துவிட்டது என நினைக்கிறேன் . இது நனவான வாழ்க்கை மற்றும் ஆன்மீகத்தின் சிறந்த தொடக்கம்’ என பதிவிட்டுள்ளார் . நடிகை அமலா பாலின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் லைக்ஸை குவித்து வருகின்றனர் ‌.

Categories

Tech |