ஜெனீவா மருத்துவமனைகள் தங்கள் செவிலியர்களை திருடுவதாக பிரான்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.
பிரபல பத்திரிக்கை ஒன்றில் “ஜெனிவா எங்கள் செவிலியர்களை திருடுகிறது” என்று தலைப்புச் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது பிரான்சில் கொரோனா மிகவும் தீவிரமடைந்து வருவதால் மருத்துவமனை ஊழியர்களை நாங்கள் இழந்து வருகிறோம் என்று பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேட்டியளித்துள்ளார். பிரான்ஸிலுள்ள Haute-sevoie என்ற பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Martial Saddier கூறுகையில், ஜெனிவாவிலிருக்கும் தனியார் மருத்துவமனைகள் பல என்ற Haute-sevoie பகுதியில் உள்ள செவிலியர்களை அதிக ஊதியம் தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி கவர்ந்து வருகிறது.
இந்த கொரோனா காலகட்டத்தில் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். ஆனால் Haute-sevoie பகுதியில் இருக்கும் மருத்துவமனையின் ஊழியர்கள் ஜெனிவாவிற்கு பணிக்கு செல்வது புதியதல்ல மேலும் ஜெனிவா பல்கலைகழகத்தில் பணிபுரியும் செவிலியர்களில் 69% பேர் பிரான்சில் தான் வசிக்கிறார்கள். இந்நிலையில் தங்கள் பகுதி உள்ளூர் பத்திரிகைகளில் ஜெனிவா மருத்துவமனைகள் விளம்பரம் செய்து ஊழியர்களை வரவழைப்பதாக Haute-sevoie பகுதி குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் பிரான்சில் நாங்கள் எந்தவித விளம்பரமும் செய்ததில்லை என்று ஜெனீவா மருத்துவமனை அலுவலர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார்.