Categories
மாநில செய்திகள்

கொட்டி தீர்க்கும் கனமழை…. உங்க மாவட்டத்திற்கும் எப்படின்னு பாருங்கள்…!!

எந்தெந்த மாவட்டங்களில் மழை எப்படி பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலத்தின் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, கடலூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கடலோர பகுதி மாவட்டங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழையும், ஓரிரு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 6ஆம் தேதி நீலகிரி, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கடலோர மாவட்டங்களான சென்னை மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். ஜனவரி 7ஆம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

ஜனவரி 8ஆம் தேதி புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். ஜனவரி 9ஆம் தேதி தென் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கனமழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் ஏனைய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |