Categories
தேசிய செய்திகள்

அடடே..! நீங்களா…! ஊழியர் வீட்டுக்கு சென்ற ரத்தன் டாட்டா… அசர வைக்கும் காரணம் …!!

ரத்தன் டாட்டா தன்னிடம் வேலை பார்த்த ஊழியர் ஒருவரின் வீட்டிற்கு சென்று அவரின் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.

இந்தியாவின் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவர் ரத்தன் டாடா. இவர் தனது தொண்டு நிறுவனம் மூலம் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற பலருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இவர் தன்னிடம் வேலை பார்த்து வந்த முன்னாள் ஊழியருக்கு உடல்நலம் குன்றியதால் அவரை அவரது வீட்டிற்கே சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளார். இந்நிலையில் பிரண்ட்ஸ் சொசைட்டியில் இருக்கும் முன்னாள் ஊழியரின் வீட்டிற்கு காரில் ரத்தன் டாட்டா சென்றார்.

அதன் பின் அவரின் உடல் நலம் குறித்து விசாரித்து அறிந்தார். இதனையடுத்து ரத்தன் டாடாவின் வருகையை எதிர்பாராத அவரது குடும்பத்தினரிடையே இது இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு தன்னிடம் வேலை பார்த்த ஊழியரின் ஒருவரின் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்த முன்னணி தொழில் அதிபரான ரத்தன் டாடாவின் இந்தச் செயலானது பலரையும் வியப்பில் ஆழ்த்தியதோடு, இச்சம்பவம் தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

Categories

Tech |