Categories
உலக செய்திகள்

“கடந்த 10 ஆண்டுகளில் இதுவே முதல் முறை”… இந்தியாவிடம் அரிசி வாங்கும் பெரிய நாடுகள்..!!

பெரிய அளவு அரிசியை ஏற்றுமதி செய்யும் நாடுகள் இந்தியாவை நாடும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.

அரிசி ஏற்றுமதியில் இந்தியாவுக்கு போட்டியாக இருந்துவந்த வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகள் பல ஆண்டுகள் கழித்து தற்போது இந்தியாவை மீண்டும் நாடியுள்ளது. உலகில் அரசி வணிகத்தில் இந்தியாவிற்கு ஒரே போட்டி என்றால் அது வியட்நாம். மூன்றாவது பெரிய அரிசி ஏற்றுமதியான வியட்நாம் உள்நாட்டு தேவை அதிகரித்தாலும், கடுமையான விலை ஏற்றத்தால் இந்த முடிவை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அரிசி ஏற்றுமதியில் முக்கிய நாடான தாய்லாந்தும் இந்தியாவில் அரிசி வாங்க முடிவு செய்துள்ளது.

இதனால் இந்தியாவில் இருந்து ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 70,000 டன் அரிசி ஏற்றுமதி செய்ய உள்ளது. மேலும் கப்பல் போக்குவரத்தில் ஒரு டன்னுக்கு 310 டாலர் சலுகை வழங்கப்பட உள்ளது. இந்திய அரசு ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் கிருஷ்ணாராவ் இதுகுறித்து கூறிய போது: “முதன் முறையாக வியட்நாமிற்கு அரிசியை ஏற்றுமதி செய்ய உள்ளோம். இந்திய அரிசி விலைகள் பலரும் விரும்பக் கூடிய.தாகும் பெரிய அளவிலான வித்தியாசத்துடன் கிடைப்பதால் பலர் நம்மை நாடி வருகின்றனர்” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |