Categories
தேசிய செய்திகள்

7 நாட்களில்…” இந்த சலுகையோடு, புதிய ரேஷன் கார்டு…” விண்ணப்பிப்பது எப்படி..? வாங்க பார்க்கலாம்..!!

ஏழு நாட்களில் சிறப்பு சலுகையோடு புதிய ரேஷன் கார்டு பெற முடியும். அது எப்படி வாங்குவது என்பதை பார்ப்போம்.

அரசு நியாயவிலைக் கடைகளில் அரசு வழங்கும் பொருட்களை பெற ரேஷன் கார்டு வைத்திருந்தால் மட்டும் போதாது. ரேஷன் கார்டில் பல வகை உள்ளது. எல்லா காடுகளுக்கும் எல்லா சலுகையும் கிடைக்காது. தற்போது மக்கள் ரேஷன் கார்டின் வகைகள், பிரிவுகள், நன்மை போன்றவற்றை அறிந்து வருகின்றனர். தற்போது முன்னுரிமை அட்டை(PHH) மற்றும் முன்னுரிமை இல்லாத அட்டை(NPHH) வகைப்படுத்தப்பட்டு தேர்வு அளவுகோல்கள் மூலம் செயல்படுகின்றது என்பதை அறிய வேண்டும்.

தமிழக அரசு மூன்று வகை ரேஷன் கார்டுகளை வழங்குகிறது. APL, BPL மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா (Antyodaya Anna Yojana) ரேஷன் கார்டு போன்றவை அந்தந்த மாநில அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட வெவ்வேறு வண்ணங்களால் வேறுபடுகின்றன.2013 இன் படி APLமற்றும் BPL குழு ஆகியவை முன்னுரிமை அல்லாத மற்றும் முன்னுரிமை என இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப் பட்டுள்ளது. இவர்களின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகின்றது.

புதிய ரேஷன் கார்டுகளை விண்ணப்பிப்பது:

அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல், விண்ணப்பதாரரின் வசிப்பிட ஆதாரம், வருமான சான்றிதழ், தற்போதுள்ள ரேஷன் கார்டு, மேலும் எந்தெந்த வகை என்கிற குறிப்பிட்ட சான்றிதழ்.

விண்ணப்பதாரர் எந்த ஒரு விலக்கு பிரிவின் கீழும் வாழக்கூடாது. விண்ணப்பம் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் பெறப்படும்.

இந்த வகை ரேஷன் கார்டு திட்டம் நமது மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலால் மத்திய அரசால் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

யார் விண்ணப்பிக்கலாம்

விதவைகள், தீராத நோயாளிகள், ஊனமுற்றோர், 60 வயதுக்கு மேற்பட்டோர், சமுதாய ஆதரவற்ற அல்லது குறைந்தபட்ச வருமானம் இல்லாத முதியோர்கள், மலைவாழ் குடும்பங்கள், எய்ட்ஸ் நோயாளிகள், தொழுநோயாளிகள் இவர்களுக்கு இந்த ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |