Categories
டெக்னாலஜி பல்சுவை

“கிரெடிட் கார்டு வாங்க போறீங்களா”… வாங்கும்முன் இதையெல்லாம் கவனித்து விட்டு வாங்குங்கள்..!!

கிரெடிட் கார்டு வாங்குவதற்கு முன்பு இதையெல்லாம் கவனித்து வாங்குங்கள்.

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் கிரெடிட் கார்ட் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதில் கிரெடிட் கார்டுகளை தவறாக பயன்படுத்தும் போது நீங்கள் அதிக அளவில் வரி செலுத்த வேண்டியிருக்கும். தவறாக பயன்படுத்தி பலரும் இவ்வாறு வரி செலுத்தியுள்ளனர். பொதுவாக கிரெடிட் கார்டை பயன்படுத்தி பலனடைந்தவர்கள் விட அதனால் பிரச்சனைகளை சந்தித்தவர்களே அதிகம். எனவே அவற்றை சரியாக பயன்படுத்தினால் பல நன்மைகள் உண்டு.

கிரெடிட் கார்டை முதல் முறையாக பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் என்ன என்றால் கிரெடிட் கார்டு வாங்கும் முன் முதலில் வருடாந்திர கட்டணம் எவ்வளவு என்பதை பார்க்க வேண்டும். குறைந்த வருடாந்திர கட்டணம் உள்ள கார்டுகளை தேர்வு செய்ய வேண்டும். மிகவும் முக்கியமானது என்ன என்றால் எக்காரணத்தைக் கொண்டும் கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுக்க கூடாது.

ஏனெனில் அதற்கு அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படும். கடனை கட்டாமல் சிக்கலில் மாட்டிக் கொண்டால் பின்னர் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும். கிரெடிட் கார்ட் பில் செலுத்தும் போது சிலர் முழு கட்டணத்தையும் செலுத்த முடியவில்லை என்றால் ,குறைந்தபட்ச தொகை மட்டும் செலுத்துவார்கள் மீதமுள்ள தொகைக்கு கிரெடிட் கார்டு நிறுவனம் வட்டிக்கு வட்டி போட்டு வசூல் செய்யும். புதிய கார்டு வாங்கும்போது கடனுக்கான வட்டி எவ்வளவு என தெரிந்து கொள்ள வேண்டும்.

Categories

Tech |