Categories
தேசிய செய்திகள்

தன் தவறை ஒப்புக் கொள்ளாத அகந்தை… விரைவில் அரசு உணரும்… ப. சிதம்பரம் விமர்சனம்…!!!

வேளாண் குடிமக்கள் கோபத்தை எந்த அரசும் வெல்ல முடியாது, தன் தவறை அரசு உணரும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் அனைவரும் டெல்லியில் 40 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு அவர்களுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்பப் பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவு எழுந்துள்ளது.

இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ப. சிதம்பரம் கூறுகையில், “உழவினார் கைம்மடங்கின் இல்லை வாழ்வதூஉம் விட்டேன் என பார்க்கும் நிலை” என்பதை விரைவில் அரசு உணரும். வேளாண் குடி மக்களின் கடும் கோபத்தை எந்த அரசும் வெல்ல முடியாது. வேளாண் குடி மக்களே வெற்றி பெறுவார்கள். விவசாயிகளுடன் நடைபெற்ற ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததற்கு யார் காரணம், என்ன காரணம்? மத்திய அரசின் பிடிவாதமும் தன் தவறை ஒப்புக்கொள்ளவே கொள்ளாத அகந்தையுமே காரணங்கள்” என்ற அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Categories

Tech |