Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலால் மர்ம மரணம்… 8மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்…!!!

சிவகங்கையில் கள்ளக்காதலுடன் வசித்த கீர்த்திகா எனும் பெண்ணின் 8மாதக் குழந்தை மர்மமான முறையில் இறந்ததால் சந்தேகமடைந்த குழந்தையின் பாட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.

சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். நகர் ஜெயபாலாஜி தெருவை சேர்ந்தவர் வள்ளி என்பவர். இவருக்கு கீர்த்திகா எனும் 22 வயதுடைய மகள் இருக்கிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கீர்த்திகாவிற்கும், அன்னை சத்யா நகரை சேர்ந்த மணி என்பவருக்கும் திருமணம் நடந்தது. தற்போது அவர்களுக்கு எட்டு மாதம் நிரம்பிய இரட்டை கைக்குழந்தை உள்ளது. ஆனால், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே கணவன்,மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கீர்த்திகா தனது தாய் வீட்டில் இருந்தார்.

கீர்த்திகா தனது கணவரின் வீட்டில் வசித்துக் கொண்டிருக்கும் போது அதே பகுதியில் வசித்துவந்த முனியப்பன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சில நாட்களில் அது கள்ளக்காதலாக மாறி உள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கீர்த்திகாவும், முனியப்பனும் ஒரு கைக்குழந்தையுடன் சிவகங்கை சென்று அங்கு ஒரு வீட்டில் தங்கி வசித்து வந்தனர். கீர்த்திகாவின் மற்றொரு குழந்தை அவருடைய தாயிடம் இருந்தது.

கடந்த 3ஆம் தேதி கீர்த்திகாவிடம் இருந்த குழந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை சிவகங்கை மருத்துவமனையில் கிருத்திகா சேர்த்தார். மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். அதன் பின் குழந்தையின் உடலை அடக்கம் செய்வதற்காக கீர்த்திகாவும், முனியப்பனும் சென்னை வந்தனர்.

அதன் பின் இறந்த குழந்தையின் பாட்டியான வள்ளி எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் தன் பேத்தியின் இறப்பில் ஏதோ மர்மம் இருப்பதாக கூறி புகார் அளித்தார். அதன்பிறகு போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |