Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அக்காவைக் கொன்ற தம்பி… கள்ளக் காதலால் ஏற்பட்ட கொடூரம்…!!!

சென்னை எண்ணூரில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த அக்காவை, தம்பி அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூர் எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் 19வது பிளாக்கை சேர்ந்தவர் விஜயகுமார் என்பவர். இவர் கூலித் தொழில் செய்து வந்துள்ளார்.இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு பத்து வயது நிரம்பிய ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன்,மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் விஜயகுமார் தனது தாய் வீட்டிற்கு தன் மகளை அழைத்துக்கொண்டு சென்று விட்டார்.

நேற்று முன்தினம் சுப்புலட்சுமியின் சித்தி மகன் பிரதாப் சுப்புலட்சுமியை பார்ப்பதற்கு அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் கதவு உள்பக்கமாக சாத்தப்பட்டிருந்தது. சிறிது நேரம் கழித்து சுப்புலட்சுமி வீட்டின் கதவை திறந்தார். ஆனால் அவர் மது போதையில் இருந்துள்ளார். பிரதாப் ஏன் இப்படி பதற்றமாக இருக்கிறாய்? என்று கேட்டுள்ளார். அதற்கு சுப்புலட்சுமி சரியாக பதிலளிக்கவில்லை. அதனால் சந்தேகமடைந்த பிரதாப் வீட்டிற்குள் சென்று பார்த்தார்.

அப்போது கட்டிலுக்கு அடியில் மீஞ்சூரை சேர்ந்த ஜானகிராமன் என்பவர் மறைந்திருந்தார். அவரை கண்ட பிரதாப் தன் அக்காவும் இவரும் உல்லாசமாக இருந்துள்ளதை அறிந்துகொண்டார். அதன்பின் அவரை கட்டிலின் அடியில் இருந்து வெளியே இழுத்து சரமாரியாக அடித்து ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டார். பின்பு தனது அக்கா சுப்புலட்சுமியை மிகவும் கடுமையாக அடித்து அருகில் இருந்த தலையணை ஒன்றை எடுத்து அவரது முகத்தில் வைத்து அழுத்தி கொலை செய்து விட்டார். அதன் பின் அவரே எண்ணூர் காவல் நிலையத்திற்கு சென்று நான் கொலை செய்துவிட்டேன் என்று கூறி சரணடைந்தார்.

அதன் பின்பு சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சுப்புலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த அக்காவை தம்பியே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |