தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னையில் விடிய விடிய கொட்டிய மழையால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதையடுத்து ஏரிகள் நிரம்பியதால் செம்பரம்பாக்கம் புழல் ஏரிகள் திறந்து விடப்பட்டுள்ளன. இந்நிலையில் அடுத்த 12 மணி நேரத்துக்கு மழை இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கடலூர், நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டது. ஏனைய கடலோர மாவட்டங்கள் மிதமான மழையும் பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.