Categories
அரசியல் மாநில செய்திகள்

மலர் தூவினால் மயிர்கொட்டி விடுமா தளபதி?… ஸ்டாலினை விமர்சிக்கும் நெட்டிசன்கள்…!!!

கும்பகோணத்தில் ஸ்டாலின் தலையில் மலரை தூவியதால் திமுக தொண்டனின் எம்எல்ஏ அசிங்கமான வார்த்தையால் திட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழகம் முழுவதிலும் பிரசாரம் செய்து கொண்டிருக்கும் அவர் நேற்று கும்பகோணம் சென்றிருந்தார். அங்கு அவர் காரை விட்டு இறங்கி வரும்போது தொண்டர்கள் மலர் தூவியும் கோஷம் எழுப்பியும் அவரை வரவேற்றனர். அப்போது தொண்டர் ஒருவர் வீசிய மலர், ஸ்டாலினின் தலையில் விழுந்தது. அதனால் ஆத்திரமடைந்த ஸ்டாலின், மலர் வீசிய தொண்டனை பார்த்து முறைத்துக் கொண்டே நடந்து சென்றார்.

அப்போது தொண்டர்கள் தொடர்ந்து மலர் வீசியதால், ஸ்டாலின் கடுப்பானார். ஆனால் தொண்டர்களிடம் அவர் கோபத்தை காட்டாத நிலையில், இதனை கண்ட எம்எல்ஏ அன்பழகன், பொதுவெளியில் தொண்டனை தகாத வார்த்தையில் திட்டினார். இது அங்கிருந்த சக தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மலர் தூவி வரவேற்றது தவறா? என்ற கேள்வியை எழுப்பினர். இந்த சம்பவம் நெட்டிசன்களுக்கு நல்ல தீனியாக அமைந்துள்ளது. இதனை விமர்சித்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Categories

Tech |