Categories
சினிமா தமிழ் சினிமா

டிக்கெட் டு ஃபினாலே… ஐந்தாம் சுற்று… அசத்தலாக விளையாடிய ரியோ… வெளியான பஸ்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது . இதில் நடந்த நான்கு டாஸ்க்குகளிலும் போட்டியாளர்கள் மிகச் சிறப்பாக விளையாடினர் . அனைத்து போட்டிகளிலும் ரம்யா அசத்தலாக விளையாடி பட்டியலில் நல்ல இடத்தை பிடித்திருந்தார் . இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோ வில் ஐந்தாம் சுற்று நடைபெறுகிறது . அதில் போட்டியாளர்கள் கொடுக்கப்பட்ட வளையத்துக்குள் பந்தை சுற்றி பேலன்ஸ் செய்ய வேண்டும் .

இதில் ஆரம்பத்திலேயே ரம்யா ,ஆரி, சோம் ,கேபி ஆகியோர் தோற்று விடுகின்றனர் ‌ . கடைசிவரை பாலாஜி மற்றும் ரியோ சிறப்பாக விளையாடி வருகின்றனர் . இறுதியில் பாலாஜியும் பந்தை கீழே போட்டுவிட ரியோ அசத்தலாக வெற்றி பெறுகிறார் . இதனால் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற அதிக வாய்ப்பு ரியோ, ரம்யா இருவருக்கும் உள்ளது என தெரிகிறது. இவர்களில் யார் வெல்கிறார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .

Categories

Tech |