இதைத் தொடர்ந்து தற்போது கேரளாவிலும் பறவைக் காய்ச்சல் அதிகரித்துள்ளது. தற்போது ஆலப்புழை மற்றும் கோட்டயம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு அதிகமாகவுள்ளது. இதன் காரணமாக இரண்டு மாவட்டங்களில் பறவைகளை அழிக்கும் நடவடிக்கையில் மாநில சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் பிற பகுதிகளுக்கு பரவாமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகிறது.
அதேபோல் தமிழகத்தில் நாமக்கல் பகுதிகளிலும் பறவைக்காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் மத்தியில் பறவைக்காய்ச்சல் காரணமாக சிக்கன், முட்டை போன்றவற்றை சாப்பிடலாமா, இதன் மூலம் பறவைக்காய்ச்சல் பரவுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பொதுவாக இந்த வைரஸ் 70 டிகிரி C வெப்பநிலையில் 30 நிமிடங்களில் அழிக்கப்படுகிறது. இதனால் மாமிசங்களை நன்கு வேகவைத்து, சமைத்து சாப்பிடும் போது இந்த வைரஸ் பரவாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.