திருமணத்திற்கு முன்பாக காதலியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாக சீரியல் நடிகை ஒருவர் காதலன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
சென்னை, கிழக்கு முகப்பேர் பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ராதிகா. இவர் தொலைக்காட்சியில் சீரியலில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இவருக்கும், கீழ்கட்டளை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற இருக்கின்றது. இதற்கிடையில் ராஜேஷ் ஒரு ஹோட்டலில் இவன் மேனேஜ்மென்ட் செய்வதாகவும், அங்கு ராதிகாவை பார்க்க வரும்படி கூறியுள்ளார். அங்கு சென்ற ராதிகாவுடன் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார்.
அதன்பிறகு 10 லட்சம் கொடுத்தால்தான் உன்னை திருமணம் செய்து கொள்வேன் என்றும், இதை வெளியில் கூறினால் மார்பிங் செய்த போட்டோவை இணைய தளத்தில் பகிர்ந்து சினிமா வாழ்க்கையை அழித்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இதனால் அவர் முயன்ற அளவுக்கு 2.50 லட்சம் சேர்த்து ராஜேஷிடம் கொடுத்துள்ளார். இது பத்தாது என்று கூறிய ராஜேஷ் ஆசிட் வீசி விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராதிகா ஜே.ஜே நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ராஜேஷ் பணம் கொடுத்து ஈடுகட்டிதாகவும் தகவல் சொல்லப்படுகின்றது. இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டனர். திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் திருமணத்திற்கு முன்பு உல்லாசமாக இருந்துவிட்டு திருமணத்திற்கு மறுத்த ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.